காவலர் மீது இரும்புக் கம்பியால் கொடூர தாக்குதல்! ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிய தமிழகம்! ஆளுங்கட்சியை விளாசும் EPS!

Published : Feb 28, 2024, 09:45 AM ISTUpdated : Feb 28, 2024, 09:47 AM IST
காவலர் மீது இரும்புக் கம்பியால் கொடூர தாக்குதல்! ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிய தமிழகம்! ஆளுங்கட்சியை விளாசும் EPS!

சுருக்கம்

இந்த விடியா ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது, சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற நிலைக்கு தமிழ்நாடு தள்ளபட்டு இருப்பதற்கு விடியா அரசுக்கு என் கடும் கண்டனங்கள்.

அரக்கோணம் காவல்நிலைய  உதவி ஆய்வாளர் நாராயணசாமி மீது ரவுடிகள் இரும்புக் கம்பியால் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ராணிப்பேட்டை மாவட்டம்,  அரக்கோணம் தாலுகா காவல்நிலைய  உதவி ஆய்வாளர் நாராயணசாமி அவர்களை ரவுடிகள் இருவர் இரும்புக் கம்பிகளால் தாக்கி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விடியா ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது, சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற நிலைக்கு தமிழ்நாடு தள்ளபட்டு இருப்பதற்கு விடியா அரசுக்கு என் கடும் கண்டனங்கள்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு  போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதே ஆணிவேர், அதை திமுகவினரே செய்து வருகின்றனர் என்பது இன்னும் வேதனைக்குரியது.  போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறி, காவல்துறையின் கைகளை கட்டி தமிழ்நாட்டை ரவுடிகள் ராஜ்ஜியமாக மாற்றி இருக்கும் இந்த கையாலாகாத அரசினை மக்கள் பேராதரவுடன் விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் என பதிவிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி