அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Feb 28, 2024, 8:10 AM IST
Highlights

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம்.

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம். இவர் 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் டெண்டர் விடும் பணி நடைபெற்றது. அந்த டெண்டரில்  ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: சிறையில் இருந்து வெளியே வருவாரா செந்தில் பாலாஜி? இன்று காலை தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ கணவர் பன்னீர்செல்வம் முதல் குற்றவாளியாவும், அப்போதைய நகராட்சி ஆணையராக இருந்த பெருமாள் என்பவர் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து மொத்தம் 6 பேர் இந்த வழக்கில் கொண்டுவரப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க:  அதிமுக வாக்குகளுக்கு குறிவைக்கும் பிரதமர் மோடி.. எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்தது ஏன்? வேற மாறி பிளான்..

மேலும், அப்போதைய நகராட்சி ஆணையராக இருந்த பெருமாள் வீடு சென்னையில் இருப்பதால் அவர்களது வீட்டிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

click me!