முன்னாடியும் யாரும் இல்ல; பின்னாடியும் யாரும் இல்ல - பதிலடி கொடுத்த ஒபிஎஸ்...

First Published Nov 23, 2017, 7:19 PM IST
Highlights
There is no one before the twin leaf is given to their team and there is nobody behind


இரட்டை இலை தங்கள் அணிக்கு வழங்கப்பட்டதற்கு முன்னாடியும் யாரும் இல்லை, பின்னாடியும் யாரும் இல்லை என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. காரணம் அதிமுக இரு அணியாக பிரிந்தது. 12 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பன்னீர் அணி நாங்களே உண்மையான அதிமுக என்ற குரலோசையை எழுப்பியது. 

இதனால் குழம்பிய எலெக்‌ஷன் கமிஷன் யாருக்கும் இலை இல்லை என முடிவெடுத்தது. இதையடுத்து தன்னோடு ஒத்துழைக்காத டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சை சமாதானத்திற்கு அழைத்தார். அதன்படி தற்போது, இரட்டை இலை சின்னம் மீண்டும் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு கிடைத்துள்ளது. 

இரட்டை இலை சின்னம் மீண்டும் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதை அடுத்து தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனையடுத்து அதிமுகவில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கமாக அதிமுக செயல்படும் என்றும் தேர்தல் ஆணையம் மகிழ்ச்சிகரமான தீர்ப்பு வழங்கியுள்ளதாகம் தெரிவித்தார். 

இரட்டை இலை வழங்கப்பட்டதன் பின்னாடி மத்திய அரசின் தலையீடு உள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பன்னீர், முன்னாடியும் யாரும் இல்லை பின்னாடியும் யாரும் இல்லை என கிண்டலடித்தார். 

click me!