மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்.. எடப்பாடியை அலறவிடும் கனிமொழி..!

Published : Aug 19, 2021, 07:28 PM IST
மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்.. எடப்பாடியை அலறவிடும் கனிமொழி..!

சுருக்கம்

கொடநாடு விவகாரம், அவர்களது ஆட்சிக் காலத்திலேயே வெளியே வந்தது. அப்போது ஒரு பத்திரிகையாளர்தான் அங்கு நடந்த உண்மைகளை வெளியே கொண்டுவந்தார். எனவே, யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். ஒரே நாளில் யாராலும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது என கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி;- தேர்தல் வாக்குறுதிகளை யார் நிறைவேற்றாமல் இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து மக்களைத் தொடர்ந்து ஏமாற்றியதால்தான், மக்கள் இன்று அவர்களுக்குச் சரியான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். ஒரே நாளில் யாராலும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது. பட்ஜெட் முன்பு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை மூலம், தமிழகத்தின் நிதி நிலையை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது தெரிந்துகொள்ளுங்கள். 

கொடநாடு விவகாரம், அவர்களது ஆட்சிக் காலத்திலேயே வெளியே வந்தது. அப்போது ஒரு பத்திரிகையாளர்தான் அங்கு நடந்த உண்மைகளை வெளியே கொண்டுவந்தார். எனவே, யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஒரு பெரிய கொலை வழக்கு, அதில் உள்ள சிக்கல்கள் பத்திரிகையாளர்களால் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. யாராக இருந்தாலும் நியாயம் கிடைக்க வேண்டும். அதுதான் அரசின் கடமை. அவர்களுக்கு மடியில் கனம் இருந்தால் பயம் இருக்கலாம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!