அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது.
அமலாக்கத்துறை முடக்கிய 34. 75 லட்சத்திற்கு தகுந்த ஆவணங்களை கொடுத்து சட்டப்படி மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை களப்பணியாற்றுகிறது. 2012 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.
அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட நாள் முதல் கல்வி, மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு மக்கள் நல பணிகளை செய்து வருகிறது. அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும் வரவு செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்து வருகிறோம். அறக்கட்டளைக்கு எந்த வித அசையா சொத்தும் கிடையாது.
அமலாக்க்துறை ட்விட்டரில் கூறப்பட்டுள்ள 36 கோடி சொத்து முடக்கத்திற்க்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறக்கட்டளை என்றும் அறத்தின் வழி மட்டுமே நடக்கும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்