கட்சி இனி வளரும்னு நம்பிக்கை இல்ல.. துரோகிகளே பாமகவில் இருந்து விலகிவிடுங்கள்.. நெருப்பாக கொதித்த ராமதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2021, 10:41 AM IST
Highlights

கடலூரில் கோவிந்தராஜ் உயிரிழந்ததற்கு நியாயம் கிடைக்க நான் பட்ட பாடு சொல்லி முடியாது, அத்தனை பேருக்கு போனில் அழைத்து பேசினேன், ஆனால் இப்போது சிலர் அங்கு சென்று கண்ணீர் வடிக்கிறார்கள், 

கட்சியில் இருந்து கொண்டே பாமகவுக்கு துரோகம் செய்பவர்கள் கட்சியிலிருந்து விலகி விடுங்கள் என்றும், துரோகிகள் ஒருபோதும் கட்சிக்கு வேண்டவே வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக  பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு பாமக வெற்றி பெறாத நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். கடந்த 12ஆம் தேதி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் திமுக அமோக வெற்றி பெற்றதுடன், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்தன. இதில் உள்ளாட்சி தேர்தலில் தங்கள் வலிமையை  நிரூபிக்க அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து களம் கண்ட பாமகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது, எனக்கு வருத்தம் என்றால் அது கொஞ்ச நஞ்ச வருத்தம் அல்ல, உள்ளாட்சித் தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் வன்னிய மக்கள் வலுவாகவும், பலமாகவும் உள்ள மாவட்டங்கள் ஆகும். வன்னிய மக்கள் அடர்த்தியாக வாழ்கின்ற இந்த மாவட்டங்களல்கூட எதிர்பார்த்த அளவுக்கு நமக்கு வெற்றி கிடைக்கவில்லை.அப்படியென்றால் இதுவரை என்ன கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்? நாம் ஒரு நூறு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றால், அதற்கு காரணம் என்ன? இதற்கு காரணமாக நிர்வாகிகள் தண்டனைக்குரியவர்கள், நீங்கள் எந்த காலத்திலும் கட்சியை முன்னுக்கு கொண்டு வர மாட்டீர்கள். 

இதையும் படியுங்கள்: எனது மூச்சு இருப்பதற்குள் கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்... இயலாமையில் துடித்த ராமதாஸ்.

பெரும்பாலானோர் சோரம்போகிறீர்கள், காட்டிக் கொடுப்பவர்களாக உள்ளீர்கள், அன்புமணி ராமதாஸ் கூறியதுபோல இனி இந்த கட்சி கொடியை வைத்து ஏமாற்றலாம், பணம் சம்பாதிக்கலாம், கார் வாங்கலாம் என்றெல்லாம் நினைக்காதீர்கள், கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் தயவுசெய்து விலகி விடுங்கள், இப்போது கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், பிள்ளை பிடிப்பவர்கள் வருகிறார்கள் என்று, அதுபோல இப்போது அதிகம்பேர் வருகிறார்கள். கட்சிக்கு ஆள் சேர்க்க பலர் ஊர் ஊராக அலைகிறார்கள், அதில் ஒன்று தேசிய கட்சியும் உள்ளது.  நீங்கள் அவர்களிடம்  போய்விடுங்கள் அது போன்ற இடங்களுக்கு சென்றால் உங்களுக்கு என்ன கிடைக்கும் அது போன்ற இடங்களுக்கு நீங்கள் போனால் நீங்கள் சத்திரியர்களாக இருக்க மாட்டீர்கள். நீ வன்னியனாக இருக்க மாட்டாய்.

இதையும் படியுங்கள்:ஈனம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் எங்கே போனது.? வன்னியர்களை வச்சு செய்த ராமதாஸ்.. தாறுமாறு பேச்சு.

கடலூரில் கோவிந்தராஜ் உயிரிழந்ததற்கு நியாயம் கிடைக்க நான் பட்ட பாடு சொல்லி முடியாது, அத்தனை பேருக்கு போனில் அழைத்து பேசினேன், ஆனால் இப்போது சிலர் அங்கு சென்று கண்ணீர் வடிக்கிறார்கள், அவர்கள் யார் எந்த கட்சி என்று உங்களுக்கு தெரியும், இந்த கூட்டத்தை வட தமிழ்நாட்டில், வன்னியர் பகுதிகளில் விட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை என்பதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு போதும் காம்ப்ரமைஸ் கிடையாது, உறுதியாக சொல்கிறேன், இறுதியாக சொல்கிறேன், எவ்வளவு பலமாக இருந்த நாம் இந்த நிலைமைக்கு சென்று விட்டோமே அவர் வேதனை தெரிவித்தார். ராமதாசின் இந்த கோபப் பேச்சு பாமக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!