கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 44வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன்;-
undefined
* கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து நீக்கப்படுகிறது.
* உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி 18ல் இருந்து 12 சதவீதமாக குறைப்பு.
* கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருத்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* பல்ஸ் ஆக்சிமீட்டர் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
* சானிடைசர் மீதான ஜிஎஸ்டி 18ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
* வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைப்பு.
* கொரோனா பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28ல் இருந்து 12சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக தொடரும்.
* மருந்துகள், ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 4 வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.