தலிபான்களுக்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.. பிறந்தநாள் அதுவும் மோடியை பங்கம் செய்த காங்கிரஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2021, 1:44 PM IST
Highlights

தலிபான்களுக்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா தெரிவித்துள்ளார். நாட்டை அழிவை நோக்கி பிரதமர் மோடி அழைத்து செல்கிறார் என்றும், அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். தந்தை பெரியாரின் 143வது  பிறந்த தினம் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தலிபான்களுக்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா தெரிவித்துள்ளார். நாட்டை அழிவை நோக்கி பிரதமர் மோடி அழைத்து செல்கிறார் என்றும், அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். தந்தை பெரியாரின் 143வது  பிறந்த தினம் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு எடுக்கப்பட்டது. இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்  தலைவரும் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஹசன் மவுலானா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரதமர் மோடியை கண்டித்து அவரது பிறந்த தினத்தை வேலைவாய்ப்பின்மை தினமாக அறிவித்து பிரமாண்ட பேனர்கள் வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலாகத்தில் இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மோடி ஒழிக என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியார்களிடம் பேசிய ஹசன் மௌலானா கூறியதாவது,  தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக போராடியவர், எந்த ஒரு செயலையும் இலவசமாக செய்தால் அதற்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என்ற கொள்கையோடு வாழ்ந்து காட்டியவர் தந்தை பெரியார். ஆனால் இந்தியா முழுவதும் சமூக அநீதியை கொண்டு வந்திருப்பவர் மோடி என கூறினார்.

தற்போது மோடியின் அரசியலால் இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது, வேலையின்றி ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவுக்கும் சமூகநீதிக்கும் எந்த தொடர்பும் இல்லை ஒரே ஒரு பிரிவை சார்ந்த மக்களுக்கு மட்டும் ஆதரவாக பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் தலிபான்களுக்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என கடுமையாக விமர்சித்தார் 100 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவித்துள்ள மோடி 6 லட்சம் கோடிக்கு பொது நிறுவனங்களில் விற்பதாக குற்றம் சாட்டிய ஹசன் மௌலானா, மோடியின் பிறந்த நாள் தேசிய வேலையின்மை தினமாக இளைஞர்கள் காங்கிரஸ் கடைப்பிடிப்பதாக கூறினார்.
 

click me!