பாஜகவை எதிர்க்க திராணி இல்லை.. அதிமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்.. அல்லு தெறிக்கவிட்ட அழகிரி.

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2022, 1:25 PM IST
Highlights


தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலட்சியம் என்ற முழக்கத்துடன் பாஜக அரசியலை முன்னெடுத்து வந்தாலும், அதிமுக திமுக என்ற இரு திராவிட கட்சிகளில் திமுகவை மட்டும் குறி வைத்த பாஜக மூர்க்கமாக எதிர்த்து வருகிறது. ஆனால் திராவிட சித்தாந்தத்தில் பெரிய அளவில் ஈடுபாடி அற்ற அதிமுகவுடன் கைகோர்த்து பயணிக்கிறது பாஜக. 

பாஜகவை எதிர்த்து அதிமுகவால் போராட முடியாமல் போனதே அதிமுகவின் படுதோல்விக்கு காரணம் என கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாஜகவை எதிர்த்து போராட வேண்டிய சூழல் இருந்தும், அதிமுக தொடர்ந்து மௌனமாக இருந்து வருகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலட்சியம் என்ற முழக்கத்துடன் பாஜக அரசியலை முன்னெடுத்து வந்தாலும், அதிமுக திமுக என்ற இரு திராவிட கட்சிகளில் திமுகவை மட்டும் குறி வைத்த பாஜக மூர்க்கமாக எதிர்த்து வருகிறது. ஆனால் திராவிட சித்தாந்தத்தில் பெரிய அளவில் ஈடுபாடி அற்ற அதிமுகவுடன் கைகோர்த்து பயணிக்கிறது பாஜக. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் முதல் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த வகையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பெரிய அளவில் அக்கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் இரு கட்சிகளும் தொடர்ந்து கூட்டணியில் உறுதியுடன் இருந்து வருகின்றன. அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே நேரத்தில் அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கும் பாஜக தூண்டில் போட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுகவில் வழிகாட்டு குழுவில் இடம்பெற்றிருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவின் இணைந்துள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களையே தன் பக்கம் இழுக்கும் பாஜகவின் செயலை பல கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.ஆனால் கூட்டணி உள்ள அதிமுக அதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. மொத்தத்தில் அதிமுகவை ஓபிஎஸ் இபிஎஸ் தலைமை பாஜகவிடம் அடமானம் வைத்து விட்டது, பாஜக அதிமுகவின் குரல்வளையை கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு இருக்கிறது. மெல்ல மெல்ல ஆதிமுக என்ற கட்சியை பாஜக விழுங்கப் போகிறது என கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இது ஒருபுறமிருக்க அதிமுகவின் தோல்விக்கு பாஜகவே காரணம் என்ன அதிமுகவின் மூத்த முன்னோடி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். சமீபத்தில் இது குறித்து பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்தில் திமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பெருவாரியான பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை, நாம் எடுத்த முடிவுகள் ஆகியவையே நம்முடைய தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் பாஜக கூட்டணி தான். அதிமுக பாஜக கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக அதிமுக இழந்துவிட்டது என விமர்சித்தார். அவரின் இந்த குற்றச்சாட்டு அதிமுக பாஜக கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளித்து பேசிய பாஜகவினர், அதிமுகவால்தான் பாஜக தேர்தலில் தோல்வியை சந்தித்தது என விமர்சித்தனர். பிறகு காலப்போக்கில் இந்த விமர்சனங்கள்  கரைந்து போயியுள்ளது.  எதிர்வரும் தேர்தல்களிலும் பாஜக திமுக கூட்டணி தொடரும் என அக்கட்சிகளை சார்ந்தவர்களும் கூறிவருகின்றனர்.

 அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, அதிமுகவில் தோல்விக்கான காரணத்தை விமர்சித்து பேசியுள்ளார். அதாவது வீதி தோறும் காங்கிரஸ் வீடு தோறும் காங்கிரஸ் என்ற பெயரில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரச்சார வாகனம் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கே.எஸ் அழகிரி கூறியதாவது:- பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மாநில அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமே மத்திய அரசுதான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கட்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும் பெட்ரோல் டீசலை 70 ருபாய்க்கு தான் விற்றார் ஆனால் இன்றைக்கு மோடி ஆட்சி காலத்தில் கட்சா எண்ணெய் விலை 60 டாலருக்கு குறைந்த போதும் பெட்ரோலை 35 ருபாய்க்கு விற்கலாம் ஆனால் அவர்கள் 100 ருபாய்க்கு மேல் விற்று வருகின்றார்கள்.

மத்திய அரசை எதிர்த்து தமிழக பா.ஜ.க வினர் போராட முடியாது. ஆனால் அதிமுகவால் போராட முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை இது போன்ற செயல்கள் தான் அவர்களின் தோல்விக்கு காரணம். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட நீட் தேர்வு ரத்து சட்டம் வெறும் பத்திரிக்கை செய்தியாக மட்டும் இருந்தது ஆனால் திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு சட்ட மசோதவிற்கு ஒப்புதல் அளிக்க வலியுருத்துவதற்காக மத்திய உள்த்துறை அமைச்சரை சந்திப்பதற்காக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் அனுமதி கேட்டு காத்து இருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விருப்ப பட்ட மாநிலங்களில் மட்டும் நீட் தேர்வை நடத்தி கொள்ளலாம் என விலக்கு இருந்தது ஆனால் பா ஜ க ஆட்சியில் நீட் தேர்வு அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இதுதான் அனிதா போன்ற குழந்தைகளின்  தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தங்கள் பகுதியில் கொடிக்கம்பங்களை அமைத்து காங்கிரஸை வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 

click me!