அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்..!

By vinoth kumarFirst Published Jun 9, 2021, 2:58 PM IST
Highlights

சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக எழுச்சியுடன் செயல்படுகிறது. இதே நிலைதான் தொடரும்.  நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடன் செயல்படுகிறது. இருவரும்தான் கட்சியை வழிநடத்துவர்.

ராணுவக் கட்டுப்பாட்டுடன் அதிமுக செயல்படுகிறது. எந்த பிரச்சினையும் கட்சியில் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்கட்சியான அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை வரும் ஜூன் 14ம் தேதி நடத்த அனுமதி கேட்டு சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் இன்று மனு அளித்துள்ளனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடம் பேசியவர் அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை. இதனை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.

எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக எழுச்சியுடன் செயல்படுகிறது. இதே நிலைதான் தொடரும்.  நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடன் செயல்படுகிறது. இருவரும்தான் கட்சியை வழிநடத்துவர்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கபடும். ராணுவக் கட்டுப்பாட்டுடன் அதிமுக செயல்படுகிறது. எந்த பிரச்சனையும் கட்சியில் இல்லை. திமுக போன்ற எதிரிகள் நம்மை குறித்து பேசுவதற்கு நாம் இடம் தரக்கூடாது என்பதே அதிமுகவினரின் எண்ணமாக இருக்க வேண்டும். மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே அதிமுகவினரின் எண்ணமாக இருக்க வேண்டும். திமுக, அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 3% தான் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

click me!