சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு.. அடுத்தடுத்து ஆடியோவை வெளியிட்டு அதிமுகவை அலறவிடும் சசிகலா..!

Published : Jun 09, 2021, 02:41 PM ISTUpdated : Jun 15, 2021, 06:36 PM IST
சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு.. அடுத்தடுத்து ஆடியோவை வெளியிட்டு அதிமுகவை அலறவிடும் சசிகலா..!

சுருக்கம்

தொண்டர்கள் மனதை இப்போது கட்சியில் இருப்பவர்கள் யாரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு என சசிகலா பேசியுள்ளார்.

தொண்டர்கள் மனதை இப்போது கட்சியில் இருப்பவர்கள் யாரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு என சசிகலா பேசியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால்  எதிர்பார்த்த எந்த விஷயமும் அதிமுகவில் நடைபெறாத காரணத்தால் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசிவருகிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 9 ஆடியோ பேச்சுக்கள் வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், இதற்கு அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சசிகலா பேசிய 10வது ஆடியோ வெளியாகியுள்ளது. 

அதில், தொண்டர்கள் மனதை இப்போது கட்சியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு. எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. தொண்டர்களோடு இருந்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் எப்படி கட்சியை நடத்தினார்களோ? அப்படிதான் நான் கட்சியை நடத்துவேன்.

தொண்டர்கள்தான் கட்சி என்று நான் நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள் விரைவில் நான் எல்லோரையும் சந்திக்கிறேன். நல்லபடியாக கட்சியை கொண்டு வருவோம். ஆட்சிக்கும் வருவோம். எல்லாமே என் பிள்ளைகள்தான். கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் நிச்சயம் வருவேன். தொண்டர்கள் மனக்குமுறலை தெரிவிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மன வருத்தத்தில்தான் தொண்டர்களிடம் பேச ஆரம்பித்து இருக்கிறேன். தொண்டர்களின் மனக்குமுறலை தாங்க முடியவில்லை என பேசியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!