திமுக ஆட்சியில் கொரோனா உயிரிழப்புகள் 4 மடங்கு அதிகரிப்பு.. தடுப்பூசியிலும் தோல்வி.. ஜெயக்குமார் சரவெடி..!

By vinoth kumarFirst Published Jun 9, 2021, 2:02 PM IST
Highlights

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. 39 எம்.பி.க்களை வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி வாங்க திமுக அரசு முயற்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கொரோனா உயிரிழப்புகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இறப்புகளை திமுக அரசு மறைக்கிறது. 

 39 எம்.பி.க்களை வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி வாங்க திமுக அரசு முயற்சிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் வரும் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் கடமையைச் சரிவரச் செய்திருக்கிறார். தமிழகத்தின் பல இடங்களில் தடுப்பூசி இல்லை. சில இடங்களில் இரண்டு லட்சம் தடுப்பூசி போடுவதாகக் கூறுகின்றனர். ஆனால், எங்கு போட்டிருக்கின்றனர்?

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. 39 எம்.பி.க்களை வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி வாங்க திமுக அரசு முயற்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கொரோனா உயிரிழப்புகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இறப்புகளை திமுக அரசு மறைக்கிறது. 

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட இறப்பு தணிக்கை, திமுக ஆட்சியில் நடத்தப்படவில்லை. பரிசோதனை செய்யாமலே கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுகின்றனர். ஊரடங்கை பொறுத்த வரையில் ஊரடங்காகே இல்லை. இதை சரியாக அமல்படுத்தவில்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. கொரோனா குறித்த உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

click me!