கடுமை காட்டும் உயர்நீதிமன்றம்... கனிவுகாட்டும் காவல்துறை... மு.க.ஸ்டாலினிடம் இருந்து வந்த உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jun 9, 2021, 12:50 PM IST
Highlights

 வாகன ஓட்டிகளிடம் கோபமாக நடந்து கொள்ள வேண்டாமென சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

மிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது கடந்த வாரம் முழு ஊரடங்கு அமலாகியிருந்த நிலையில், இந்த வாரம் ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்வோர், தச்சர் உள்ளிட்டோர் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போல, மளிகை மற்றும் காய்கறிக் கடைகளும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசு அறிவித்துள்ள இந்த தளர்வுகளை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் மக்கள் தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றித் திரிகின்றனர். சில இடங்களில் பணம் கொடுத்தால் இ-பாஸ் பெற்றுத் தருவதாகவும் அதை பயன்படுத்தி மக்கள் வெளியே செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ஊரடங்கில் மக்கள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், வாகன ஓட்டிகளிடம் கோபமாக நடந்து கொள்ள வேண்டாமென சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சோதனையின் போது வாகன ஓட்டிகள் கோபமாக பேசினாலும் போலீசார் கோபப்பட வேண்டாம். தவறாக பேசும் பட்சத்தில் வீடியோ எடுங்கள். பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், மக்களும் முழு ஒத்துழைப்பு தந்தால் தான் பாதிப்பை குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

click me!