அதிமுக கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை... இருவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு... வைத்தியலிங்கம் அதிரடி..!

Published : Sep 29, 2020, 12:31 PM ISTUpdated : Sep 29, 2020, 12:35 PM IST
அதிமுக கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை... இருவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு... வைத்தியலிங்கம் அதிரடி..!

சுருக்கம்

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என்று வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என்று வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் நேற்று நடந்த, அதிமுக செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. அடுத்த முதல்வர் வேட்பாளர் நீயா, நானா என்பதில் எழுந்த போட்டி காரணமாக, கட்சியினர் முன்னிலையில், இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பையும், மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திவரும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். 

ஓபிஎஸ் உடனான ஆலோசனை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்தியலிங்கம்;- கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் எனது ஆதரவு உண்டு. அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடந்த விவாதம் கட்சி வளர்ச்சிக்கானது. அதிமுக ஆட்சியை தக்கவைப்பதே எங்களது குறிக்கோள் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!