தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டம்

By Ezhilarasan BabuFirst Published Dec 31, 2020, 1:09 PM IST
Highlights

67 ஆயிரமாக இருந்த வாக்குசாவடி மையம் 95  ஆயிரமாக அதிகரிக்க திட்டம் உள்ளதாகவும் கூறினார். வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதால், கூடுதல் இயந்திரம் மகராஷ்டிரம், மத்தியபிரதேஷம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது. 

கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற  வியூகங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆதாவது, 2021ஆம் ஆண்டு மே 24ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தால் 16வது சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அதற்குள் புதிய சட்டப்பேரவை பதவி ஏற்க வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் செய்யப்படும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரி உமேஸ் சின்கா தலைமையிலான அதிகாரிகள் டிசம்பர் மாத மதியில் சென்னைக்கு வந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன்  ஆலோசனை நடத்தினார். 

மே மாதத்தில் வெயில்தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்காளர்கள் அதிக அளவில் வர தயங்குவர் என்ற காரணத்தால், ஏப்ரல் மாதம் மூன்றாவது, நான்காவது வாரத்திலேயே ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. திமுகவும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வலியுறுத்தியது. ஒருவேளை அதிமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டால், தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு  வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் நடைபெற்றவாக்காளர் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் இடம்பெற்றது குறித்தும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளதாகவும். ஒரு வாக்குசாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் கூறினார்.

67 ஆயிரமாக இருந்த வாக்குசாவடி மையம் 95  ஆயிரமாக அதிகரிக்க திட்டம் உள்ளதாகவும் கூறினார். வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதால், கூடுதல் இயந்திரம் மகராஷ்டிரம், மத்தியபிரதேஷம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது. எனவே கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

click me!