பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. பாராட்சம் பார்க்காமல் போட்டு தாக்கும் டிடிவி.!

By vinoth kumarFirst Published Dec 30, 2021, 2:26 PM IST
Highlights

இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர் ; நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர்!

நாளை இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டிஜிபி தடை விதிக்கிறார். அதே நாளில் இரவு 12 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறநிலையத் துறை அமைச்சர் சொல்கிறார். இப்படி ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்களே தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

ஒமிக்ரான், கொரோனா பரவல் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அத்தியாவசிய காரணமாக இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

இதனால் கோயில்களில் புத்தாண்டு அன்று சுவாமி தரிசனத்திற்கு தடை செய்யப்படுமா என்ற ஐயம் எழுந்தது. இதையடுத்து கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு எந்த தடையும் இல்லை. நாளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோயில்களுக்கு செல்லலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார். ஆனால் அமைச்சரோ கோயில்களுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். இதனால், இருவரின் கருத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நாளை (31.12.2021) இரவு 12.00 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டி.ஜி.பி தடை விதிக்கிறார் ; அதே நாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என அறநிலைத்துறை அமைச்சர் சொல்கிறார்.

இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர் ; நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர்!

தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

click me!