ஆண்டவா... அடுத்த 4 நாட்களுக்கு மீண்டும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை..?? வானிமை மையம் பகீர்..

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2021, 2:02 PM IST
Highlights

02.01.2022: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 தினங்களுக்கும் லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த  சில தினங்களாக வறண்ட வானிலை நிலை வந்த நிலையில் வானிலை ஆய்வு மையத் இவ்வாறு எச்சரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் டிசம்பர் மாத துவக்கம் வரை தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நவம்பர் மாதத்தில் மட்டும் மூன்று முறை  சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டித்தீர்த்ததையும் காண முடிந்தது.  இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியது. பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.  இந்நிலையில் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் முதல் மழையின் தாக்கம் குறைந்து பனி பெய்து குளிர் வாட்டி வருகிறது. பகல் நேரத்திலும் பனிப்பொழிவு இருந்து வந்தாலும் காலை மற்றும் மாலையில் குளிர் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 30.12.2021: கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 31.12.2021: கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

01.01.2022: கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 02.01.2022: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

03.01.2022: தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான   மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மண்டபம் (ராமநாதபுரம்), புவனகிரி (கடலூர் ) தலா 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை:  30.12.2021 முதல் 03.01.2022 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 

click me!