மோடி வந்து திறந்தால்தான் திறக்குமா.?? ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி.. திமுகவை டார் டாராக கிழித்த சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2021, 1:39 PM IST
Highlights

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் மோடியை ஒரு facsit என தெரிவித்தார் ஆனால் தற்போது கருணாநிதி படம் திறப்பதற்கு குடியரசு தலைவரை அழைக்கின்றனர். தற்போது மருத்துவ கல்லூரிகளை திறக்க மோடியை அழைக்கின்றனர் அவர் வந்து திறந்தால் தான் திறக்குமா என கேள்விய எழுப்பிய அவர், திமுக எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு என சந்தர்ப்பவாத கட்சியாகவே செயல்படுகிறது என தெரிவித்தார்.

திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு எடுப்பது தான் அவர்களின் இயல்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சின்னபோருர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நம்மாழ்வார் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 
மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்: இயற்கை வேளாண் பேரறிஞர் நினைவை போற்றும் நாள்,நஞ்சில்லா உணவு அதுவே கனவு என எங்களை போன்ற இளைஞர்கள் உள்ளங்களில் பதித்தவர். இயற்கை வேளாண் குறித்து இன்று பேசுவதற்கு காரணமாக இருந்தவர் நம்மாழ்வார். என்னை போன்றவர்கள் வேளாண்மை குறித்து வீதி வீதியாக பேசுவதற்கும் நம்மாழ்வார் தான் காரணம், அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் பொகிஷம்,தமிழ் இளைஞர்கள் அவரின் புதக்கங்களை வாங்கி படிக்க வேண்டும் என தெரிவித்தார். மோடி தமிழகம் வரும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்த அவர்:

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் மோடியை ஒரு facsit என தெரிவித்தார் ஆனால் தற்போது கருணாநிதி படம் திறப்பதற்கு குடியரசு தலைவரை அழைக்கின்றனர். தற்போது மருத்துவ கல்லூரிகளை திறக்க மோடியை அழைக்கின்றனர் அவர் வந்து திறந்தால் தான் திறக்குமா என கேள்விய எழுப்பிய அவர், திமுக எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு என சந்தர்ப்பவாத கட்சியாகவே செயல்படுகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் வெள்ளையர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கட்டிடங்கள் இன்னும் பாதிப்பு அடையாமல் உள்ளது எனவே அரசு மக்களுக்காக கட்டிடங்கள் கட்டும்போது அரசியல் கட்சியினர்,அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் இது போன்று நடைபெறுகிறது என்றும் மக்களுக்கான திட்டங்களில் இதுபோன்று நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது குறித்து பதிலளித்த அவர்: பாஜக சார்பாக தமிழகத்தில் நடைபெறுவதை கண்காணிக்க கூடிய நபர்கள்தான் ஆளுநர்கள் எனவே இவர்கள் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என தெரிவித்தார் மேலும் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என அண்ணாவும் கலைஞரும் கூறி இருந்தனர் ஆனால் ஆளுநர் தேவை என்பது போல ஸ்டாலின் செயல்பாடு உள்ளது என தெரிவித்த அவர் ஆளுநரை சந்தித்து விட்டு வரும் ஒவ்வொரு நேரத்திலும் அவர்களின் திட்டங்களை ஏற்று கொள்கிறார் என தெரிவித்தார். 
 

click me!