திமுக வாக்குறுதியில் மது ஒழிப்பு இல்லங்க.. மடக்கிய மாணவி.. தபாய்த்த கனி மொழி

By Ezhilarasan BabuFirst Published Apr 23, 2022, 6:11 PM IST
Highlights


பத்து ஆண்டுகள் கழித்து பல்வேறு வாக்குறுதிகள் மூலம் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் திமுகவுக்கு எதிராக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என பள்ளி மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மதுவிலக்கு என்ற வாக்குறுதியை திமுக தரவில்லை என கனிமொழி  கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவும் கூறவில்லை என்றும் எனவே மதுக்கடைகளை மூடுவது என்பது இயலாது என்றும் அவர் பதிலளித்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பத்து ஆண்டுகள் கழித்து பல்வேறு வாக்குறுதிகள் மூலம் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் திமுகவுக்கு எதிராக இருந்து வருகிறது.

அதே நேரத்தில் அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, ரவுடி கலாச்சாரம் அதிகரித்து விட்டது என்றெல்லாம் அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும்  எதிர்க்கட்சியாக இருந்தவரை மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென முழங்கி வந்த ஸ்டாலின் முதல்வரான பிறகு அது குறித்து வாய் திறக்காமல் இருந்துவருகிறாரே ஏன் என பாமக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளும் கூட டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில்தான் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மது ஒழிப்பு சம்பந்தமாக பள்ளி மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவியர் திறமைகளை முன்னேற்றம் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் உரைக்குப் பின்னர் மாணவிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அந்த கேள்விகளுக்கு கனிமொழி மிக வெளிப்படையாக பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்? 

மது காரணமாக பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன, காவல்  துறையில் உள்ளவர்கள் கூட பலர் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மது விற்பனை நிறுத்தப்படுமா? எனக்கேட்டார். அதற்கு பதிலளித்த எம்பி கனிமொழி அது போன்ற வாக்குறுதிகள் எதையும் திமுக தேர்தலின் போது தெரிவிக்கவில்லை. மதுக்கடைகளை மூடுவது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அதற்கு பதிலாக கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவரின் இந்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தொடர்ந்து கேள்வி எழுப்பிய மாணவி காவல்துறையினர் கூட மதுக்கடையில் இருந்து பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்களை பயன்படுத்தி வருகின்றனர். மதுக்கடையில் காவல்துறையினருக்கு மது வழங்கக்கூடாது என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த கனிமொழி மது கடைகளில் தொழில் ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவதில்லை, வயது அடிப்படையில் மட்டுமே மது வழங்கப்படுகிறது.

அதனால் காவல்துறையினர் என்று தனியாக தரம் பிரித்து மது வழங்காமல் இருக்க முடியாது என்றார். அதே நேரத்தில் காவல் துறையினர் பணியில் இருக்கும்போது மது அருந்திவிட்டு வந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் மது தொடர்பாக  கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் கனிமொழி அதை தவிர்த்து விட்டு சென்றார். 
 

click me!