
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டபேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசு கொரடாவை மீறி வாக்கு அளித்த ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொரடா சக்ரபாணி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.
பின்னர் இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தகுநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவு இட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது
இது குறித்த விசாரணை 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. விசாரணை முடிந்தவுடன், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இது குறித்து முக்கிய தீர்ப்பு இன்று மதியம் 2.15 மணிக்கு உயர்நீதிமன்றம் வெளியிட உள்ளது.
தடைகோரி இடையூறு செய்த தேவராஜன்
ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது
இந்நிலையில், இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வெளியிட கூடாது என தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.
தேவராஜன் தொடர் இடையூறு கொடுத்து வந்ததால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கடும் கோபம் அடைந்து உள்ளது
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்க வேண்டும் என நீதபத்திகளுக்கு தெரியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது
வழங்கின் விசாரணை மற்றும் வழக்கின் தீர்ப்பு எப்போது வழங்க வேண்டும் என்பது நீதிபதிக்கு தெரியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
ஒரு வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது நீதிபதிக்கு தெரியும்
நீதிபதிகள் உத்தரவை தொடர்ந்து, தேவராஜனை சிஆர்பிஎப் வீரர்களால் அவரை வெளியேற்றப் பட்டனர்.இந்நிலையில் இன்னும் சில மணி துளிகளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.