
குட்கா விவகாரத்தில என்னதான் சிபிஐ விசாரணை நடத்தினாலும் மாசில போலீவாரின ஒத்துழைப்பு அதில் முக்கியம் என்றும், இது ஒன்றும் திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
குட்கா முறைகேடு விவகாரத்தில் முறையாக விசாரணைக்கு சிபிஐ விசாரணை தேவை என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பு, வருமான வரித்துறை தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, உணவுப் பாதுகாப்புத்துறை தரப்பு, திமுக தரப்பு என பலரும் வாதங்களை எடுத்து வைத்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல என்றார்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றுதான் திமுக கேட்டது . சிபிஐ விசாரணை நடத்தினாலும் மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்..
குட்கா விவகாரத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றம் குற்றம்சாட்டவில்லை. குட்கா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.