2500 மெகாவாட் பற்றாக்குறை...! மின் வெட்டு ஏற்படும் அபாயம் ..? சீர் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி

By Ajmal Khan  |  First Published Apr 18, 2022, 1:20 PM IST

தமிழ்நாட்டில் கோடை காலத்தில்  மின் வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லையென தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


மின் வெட்டு ஆபத்து ?

கோடை காரணமாக மின்சாரத் தேவை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நிலக்கரி இல்லாததால் ஒட்டுமொத்த இந்தியாவும்  கடுமையான மின்வெட்டை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாடு இருளில் மூழ்குவதை தடுக்க முடியாது என அதிமுக பாமக உள்ளிட்ட  அரசியல் கட்சிகள் தெரிவித்து இருந்தன. இதற்கு ஏற்றார் போல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மின் வெட்டு காலை  மற்றும் மதிய வேளைகளில் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில்  மின் வெட்டு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் எதிர்கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்டது.

Latest Videos

undefined

2500 மெகாவாட் பற்றாக்குறை

இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் கடந்த மார்ச் 29 ம் தேதி உச்ச பட்ச மின் நுகர்வாக 17 லட்சத்து 196 மெகாவாட் இருந்ததாக தெரிவித்தார். மேலும் தற்போது மின்சார பற்றாக் குறை 2500 மெகாவாட் உள்ளது அதனை சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  குறுகிய கால மற்றும் மத்திய கால கொள்முதல் அடிப்படையில் ஏப்ரல் மாதத்திற்கு 3047 மெகா வாட்டும் , மே மாதத்திற்கு 3007 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருவதாக குறப்பிட்டார். மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி  மின்சாரம் மற்றும் என் எல் சி யிடம் 1500 மெகா வாட் மின்சாரம் பெறப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் நாளொன்றுக்கு 72000 டன் நிலக்கரி தேவையாக உள்ளது ஆனால் மத்திய அரசு 48000 டன் மட்டுமே நிலக்கரி  அளிப்பதாக கூறினார்.

மின் வெட்டே ஏற்படாது

எனவே நிலைமையை சரிசெய்ய 4லட்சத்து 80ஆயிரம்  டன் நிலக்கரி கொள்முதல் செய்ய டெண்டர்விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் டெண்டர் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை மின்வெட்டு இல்லை எனவும் பரமரிப்பு காரணங்களுக்காக போதிய முன்னறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே மின்வெட்டு  செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் மின் வெட்டே ஏற்படாது என உறுதிபட அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.  

click me!