பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... அதிமுகவை மறைமுகமாக எச்சரிக்கும் பிரேமலதா..!

Published : Feb 07, 2021, 05:24 PM IST
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... அதிமுகவை மறைமுகமாக எச்சரிக்கும் பிரேமலதா..!

சுருக்கம்

234 தொகுதிகளிலும் நமக்கு வேட்பாளர்கள் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்காக  பொறுமை காக்கிறேம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கூறியுள்ளார். 

234 தொகுதிகளிலும் நமக்கு வேட்பாளர்கள் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்காக  பொறுமை காக்கிறேம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கூறியுள்ளார். 

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்;-   சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவான கட்சிதான் தேமுதிக. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை உள்ளனர். கூட்டணி  தர்மத்திற்காக  பொறுமையாக காத்திருக்கிறோம்.  பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனித்து நின்றாலும் 10 முதல் 15  சதவிகிதம் வரை வாக்கு வங்கி உள்ளது' என்றார்.

மேலும், தேமுதிகவை கண்டு அஞ்சுகிறார்கள். வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருப்போம். இன்னும் ஒரு வாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து கேப்டன் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!