சசிகலா வருகை.. அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் எடப்பாடியார்... அதிர்ச்சியில் அமமுக..!

Published : Feb 07, 2021, 04:18 PM IST
சசிகலா வருகை.. அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் எடப்பாடியார்... அதிர்ச்சியில் அமமுக..!

சுருக்கம்

சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணம் அடைந்தார். பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் வெளியே வந்தார். இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்கள் அறிவுரையின்படி பெங்களூருவில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு வாரம் தனிமை முடிந்து, சசிகலா பெங்களூருவில் இருந்து நாளை புறப்பட்டு சென்னை திரும்புகிறார். தமிழகம் வரும் அவருக்கு பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சசிகலா வருகையை மிகவும் பெரிதுபடுத்தி காட்டாத வகையில் எடப்பாடி பழினசாமி மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால், அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!