அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி.. தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் உறுதி.. கொளுத்தி போடும் பிரேமலதா..!

Published : Feb 07, 2021, 01:48 PM IST
அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி.. தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் உறுதி.. கொளுத்தி போடும் பிரேமலதா..!

சுருக்கம்

அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்;- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது. அதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவான கட்சிதான் தேமுதிக. ஆனால், நிர்வாகிகளுடன் தொண்டர்களும்தான் கட்சியைக் கூட்டணிக்கு கொண்டு சென்றுவிட்டனர். எனக்கும் சரி கேப்டனுக்கும் சரி கூட்டணியில் உடன்பாடு இல்லை. தமிழக பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று கேப்டன் கூறுவார். எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கூட்டணி. 

தலைவர் கேப்டன் முதல்வராக வேண்டும். நாம் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும். தேமுதிக தனித்து போட்டியிடுவது புதிதல்ல, தனியாக களம் காண முடியும் என்று ஏற்கனவே நிரூபித்தவர்கள். கூட்டணியில் இருந்துகொண்டு நம்முடைய வாக்குகளை வாங்கிக் கொண்டு நம் கட்சியினரை புறக்கணிக்கிறார்கள். எனவே நாம் யாருக்கும் காத்திருக்கத் தேவையில்லை என  பிரேமலதா கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!