வீரன் வேல் வீசியது மதகரி மீது சிறுநரி மீதல்ல... அண்ணாவின் கவிதையை சுட்டிகாட்டிய டிடிவி..!

By vinoth kumarFirst Published Feb 7, 2021, 1:06 PM IST
Highlights

சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியேறிய சசிகலா நாளை தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அமமுகவினர் செய்து வருகின்றனர். ஒருபுறம் சசிகலா வருகையையொட்டி சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை. ச‌சிகலா வருகையை முன்னிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க அதிமுக முயற்சி செய்கிறது என்று டிடிவி. தினகரன் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், சசிகலாவை அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில் பேரறிஞர் அண்ணாவின் கவிதையை  தினகரன் மேற்கோள் காட்டியுள்ளார். 

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வீசினான் என்றவுடன் வசைமொழியின் விருப்பம் தீரும் வரை, விசாரம்(கவலை) குறையும் அளவு நானும் வீசவா என்று கேட்கத் தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? என அண்ணாவின் கவிதையை மேற்கொள்காட்டியுள்ளார்.

தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? மாற்றார் மனம் போன போக்கில் ஏசுவது கேட்டா உனக்கு இந்த வாட்டம்? வீரக்குலத்தில் உதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து மதகரி (மதம் பிடித்த யானை) மீது வீசினானாமே உன் முன்னோர்களில் ஒரு வீரன் களத்தில்; மறந்துவிட்டாயோ? என பதிவிட்டுள்ளார். 

click me!