இனிமேல் பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போட முடியாது... அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!

By vinoth kumarFirst Published Feb 7, 2021, 5:03 PM IST
Highlights

பள்ளிகளில் திட்டமிட்டப்படி நாளை 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பள்ளிகளில் திட்டமிட்டப்படி நாளை 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் டி.என்.பாளையத்தில் அதிமுக கட்சி அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பள்ளிகள் நடைபெற வேண்டும். குழந்தைகளின் கல்வி சிறக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் படிப்படியாகத் தான் வகுப்புகள் திறக்கப்பட்டு வருகின்றன. விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் சொல்லி இருக்கிறோம். ஆகவே எந்த அச்சமும் தேவையில்லை. திட்டமிட்டப்படி நாளை 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்.

ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பாடங்களை நடத்த குறைந்த கால அவகாசம் மட்டுமே உள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது. பிற வகுப்புளை திறக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறோம். 

மேலும், இந்தியளவில் பள்ளிக்கல்வித்துறை 3-வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு வந்துள்ளது. தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்தினால் தான் பொதுத்தேர்வை எழுத அனுமதிப்போம் என்று பள்ளிகள் கட்டாயப்படுத்தினால் அது குறித்து பெற்றோர்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

click me!