என்னை தோற்கடிக்க சதி நடக்கிறது.. கதறும் பண்ருட்டி வேல் முருகன்.. காரணம் இதுதானாம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 15, 2021, 10:38 AM IST
Highlights

ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் விசாரித்தால் அது போன்று எந்த சிறப்பு அனுமதி அட்டையும் வழங்கப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கின்றனர். எனவே கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கூறும் இந்த முரண்பட்ட தகவல்களால் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சந்தேகம் எழுப்பியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பண்ருட்டி தொகுதியில் பதிவான வாக்குகள் அங்கு உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் முன்பின் தெரியாத மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. அவர்களை பிடித்து எங்கள் கட்சியின் முகவர்கள் விசாரித்தபோது அவர்கள் இக்கல்லூரி சார்ந்தவர்கள் என்றும், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்காக லேப்டாப்புடன் வந்து இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் விசாரித்தால் அது போன்று எந்த சிறப்பு அனுமதி அட்டையும் வழங்கப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கின்றனர். எனவே கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கூறும் இந்த முரண்பட்ட தகவல்களால் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.GO BACK MODI என்று பிரதமருக்கு எதிர்ப்பு காட்டியதால் எங்கள் தொகுதியில் நான் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக எனக்கு எதிரான சதி வேலைகள் செய்வதற்காக வாக்குப் பெட்டியில் தந்திரம் செய்து எங்கள் வெற்றியை தடுத்து விடுவார்களோ என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தேர்தல் ஆணையரும் மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். மர்ம நபர்கள் யாரும் கல்லூரி வளாகத்திற்குள் வரக்கூடாது என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் எனக் கூறியுள்ளார். 

இது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 100 ஏக்கருக்கு மேல் எனக்கு சொத்து உள்ளது என முன்பு நான் கூறியிருந்தது என் அண்ணன் தம்பி குடும்பத்தார் அனைவரையும் சேர்த்து, எனக்கு மட்டும் இருக்கும் சொத்து என்பது நான் அபிடவிட் இல் குறிப்பிட்டுள்ள அளவிற்கு மட்டுமே எனக்கு தனிப்பட்ட முறையில் சொத்து உள்ளது. 2016 இல் ஜெயலலிதா இரண்டு சீட்டுக்கள் கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் நிற்க சொன்னார் அப்போது நான் மறுத்து விட்டேன் ஆனால் தனியாக களம் கண்ட போது மக்கள் என்னை நிராகரித்து விட்டனர். அதனால் யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட நான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன். 

 

click me!