வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டுநாள்தான் இருக்கு. இந்த நேரத்தில் இப்படி ஒரு சூப்பர் அறிவிப்பா..?

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2021, 9:52 AM IST
Highlights

முறையான கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், வாக்கு பதிவு மையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் தடை விதித்துள்ளது. 

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட  அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை  காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

முறையான கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், வாக்கு பதிவு மையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் தடை விதித்துள்ளது. அதேபோல் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரு தினங்களே இடையில் உள்ள நிலையில், யாரெல்லாம் வாக்களிக்க முடியும் என்பது தொடர்பான அறிவிப்பு ஒன்றை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது, அதாவது வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், பிற அடையாள அட்டைகள் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்  என்றும் கூறியுள்ளது. வாக்குப்பதிவு, வாக்காளர்கள் பூத் ஸ்லிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்கள்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் அட்டை கணக்கு புத்தகங்கள், பான் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், மாநில அரசு பணி அடையாள அட்டை, சட்டமன்ற உறுப்பினர் அட்டை, மக்களவை மாநிலங்களவை அடையாள அட்டை உட்பட 11 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 

click me!