திமுக கூட்டணியில் என்றைக்கும் விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை.. காலரை தூக்கிவிடும் அமைச்சர் கே.என்.நேரு..!

By vinoth kumarFirst Published Sep 19, 2021, 6:58 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தல் சொன்ன தேதியில் கட்டாயமாக நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதன்படி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்.

திமுகவைப் பொறுத்தமட்டில் கூட்டணியில் எப்போதும் விரிசல் ஏற்படாது. ஒன்றாக இருந்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் 2வது மெகா தடுப்பூசி முகாமை வெஸ்ட்ரி பள்ளியில் இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முழுக்க முழுக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. காவிரியில் புதிய பாலம் விரைவில் வரும். அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கோணக்கரை சாலையை சீர்படுத்த ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் சொன்ன தேதியில் கட்டாயமாக நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதன்படி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்.

தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி விடுவோம். நகர்ப்புற தேர்தல் வேலையும் ஆரம்பித்துள்ளது. அதையும் நடத்தி விடுவோம். 6 இடங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தமட்டில் கூட்டணியில் எப்போதும் விரிசல் ஏற்படாது. நடைபெறுகிற தேர்தலிலும் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

click me!