
தினமும் அட்லீஸ்ட் ஒரு பேட்டி, தினம் ஒரு விமர்சனம் ஆகியவற்றில் சிக்காவிட்டால் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு தூக்கம் வராது!
சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த ‘தூய்மை இந்தியா’ நிகழ்வில் கலந்து கொண்டவர், செய்தியாளர்களிடம் கருணாநிதியின் பிறந்தநாள் பெரும் விழாவுக்கு பா.ஜ.க.வை அழைக்காதா ஸ்டாலினின் குணத்தை இன்றும் விமர்சித்தார். பிறகு, ரஜினிகாந்தின் புதிய படத்தின் கதை தங்கள் தந்தையுடையதாக இருந்தால் அதை கைவிடும்படி மும்பை தாதாவின் மகனிடமிருந்து மிரட்டல் வந்திருக்கும் விஷயத்தை சுட்டிக் காட்டி அதற்கு கண்டனம் தெரிவித்துவிட்டு நகர்ந்தார்.
பா.ஜ.க. நின்றாலும், நடந்தாலும் விமர்சன கமெண்டுகளை போட்டுத்தாக்கும் அரசியல் பார்வையாளர்கள் ‘ஒரு மாநிலத்தில் காலூன்ற துடிக்கும் தேசிய கட்சியின் மாநில தலைவரின் கடமை இவ்வளவுதானா? தி.மு.க. அழைக்கவில்லை என்றால் அழைக்காமலே போகட்டும் அவ்வளவுதானே! அதற்காக ஏன் நாட்கணக்கில் வருத்தபட வேண்டும்? ஏன் அழைக்காமல் விட்டோம் என்று அவர்கள் யோசிக்குமளவுக்கு மக்கள் மனதை தொடும் காரியத்தை செய்தால் அதுதான் சாணக்கியத்தனம்.
அதேபோல் ரஜினி படத்துக்கு வரும் பிரச்னைக்கெல்லம கருத்து சொல்லிக் கொண்டிருப்பது, அந்த படத்துக்கு இலவசமாக ப்ரமோஷன் வேலையை செய்து கொடுப்பது போல! ரஜினியின் புதிய படத்தை விட தமிழகத்தில் பேசப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ இருக்கிறது.
உங்கள் கட்சி வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ செயல்களிலும், மக்கள் நலனுக்கான விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். இதை இனியாவது செய்வீர்கள் என்று நம்புகிறோம்.’’ என்று அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள்.
தமிழக்கா நீங்க என்ன சொல்றீங்க?