கொதித்தெழுந்த பணம் வாங்கிய பாக்கியம்! கொடுத்த காசை திரும்ப வாங்கி அம்பலப்படுத்திய அதிமுகவினர்!

By sathish kFirst Published Apr 22, 2019, 1:15 PM IST
Highlights

ஓட்டுக்கு கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிய ஆளும்கட்சியினர், அம்பலப்படுத்தியதும், வாங்கிய காசை திரும்ப கொடுத்துவிட்டு ஆவேசமாக பேசிய உசிலம்பட்டி பாக்கியம் வீடியோ வைரலாகி வருகிறது.

ஓட்டுக்கு கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிய ஆளும்கட்சியினர், அம்பலப்படுத்தியதும், வாங்கிய காசை திரும்ப கொடுத்துவிட்டு ஆவேசமாக பேசிய உசிலம்பட்டி பாக்கியம் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், வேலூர் தொகுதியை தவிர மற்ற 38 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விட்டது. எல்லா தொகுதிகளிலும் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர்.

குறிப்பாக தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்  அந்த தொகுதியில் பணத்தை வாரி இறைத்தார். அதே,  இடைத்தேர்தல் நடந்த பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம்,  சோழவந்தான், உசிலம்பட்டி, கம்பம், போடி தொகுதி மக்களுக்கு ஓட்டுக்கு ரூ.1000 வீதம் என வஞ்சனை இல்லாமல் அள்ளி, அள்ளி கொடுத்ததை பார்த்து திமுக அணி திணறியது. 

தேர்தல் முடிந்து நான்கு நாட்கள் ஆன நிலையில்,  பட்டுவாடா  விவகாரம் வெடித்துள்ளது. அதுவும் அதிமுக கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி ஆளும் கட்சியை அதிரவைத்துள்ளது.

உசிலம்பட்டியில் ஓட்டுக்காகப் பணம் வாங்கிய பாக்கியம் என்பவர்,  தேர்தல் நாளன்று ஓட்டுப் போட வரவில்லை என்று கூறி, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கின்றனர் அதிமுகவினர். அதனால் ஆத்திரமடைந்த பாக்கியம், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்.  

இதுதொடர்பாக பாக்கியம், “எனக்கு இரண்டாவது வார்டில் ஓட்டு இருக்கிறது என்று கூறி இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறி ரூ.1000 பணம் கொடுத்தார்கள். சரி என்று விட்டுவிட்டேன். திரும்பி என் கணவரிடம் வந்து ரூ.1000 கொடுத்துள்ளார். அவரும் வாங்கியுள்ளார். நான் வாங்கவில்லை.

அதன்பிறகு நீங்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போடவில்லை என்று கூறினார்கள். உடனே நாங்கள் என் கணவர் மூலமாக பணத்தை கொடுத்துவிட்டோம். எங்கள் தெருவில் 60 பேருக்கு மேல் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடவில்லை என்று அடைக்கலம் (அதிமுக நிர்வாகி) கூறுகிறார். நாங்களும் ஆளுங்கட்சிக்காரர்கள்தான். நான் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாமல் இருந்தால்தான் பேச வேண்டும். ஆனால் நான் ஓட்டுப் போட்டுள்ளேன். எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்திவிட்டனர். இதற்கு அதிமுகவினர் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறுகிறார். அதிமுக பெண் பாக்கியத்தின் ஆவேசப் பேச்சு,  சோசியல் மீடியாவில் வேகமாக வைரலாகி வருகிறது.   

click me!