அரவக்குறிச்சியில் நிர்மலா பெரியசாமி நின்னா தோல்வி உறுதி ! அதிமுக அவரையே நிறுத்த பிரார்த்தனை செய்யும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் !!

By Selvanayagam PFirst Published Apr 22, 2019, 12:29 PM IST
Highlights

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி சீட் கேட்டுள்ள நிலையில் அவர் நின்றால் தோல்வி உறுதி என்று சொல்லி சிரிக்கும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள், அவரையே வேட்பாளராக நிறுத்த கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வணக்கம்…  இப்படி ஸ்டைலாக தொலைக்காட்சியில் செய்தி வாசித்த நிர்மலா பெரியசாமி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 30 – 35 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் செட்டில் ஆன இவர். சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வந்தார்.

குறுகிய காலத்தில் புகழ் பெற்ற அவர், திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதிக்கும் மிகவும் நெருக்கமானார். கிட்டத்தட்ட வைரமுத்து இருந்த இடத்தையே பிடித்துவிட்டார் என்று கூறும் அளவுக்கு அங்கு செல்வாக்குப் பெருகியது.

இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் நிற்க சீட் கேட்டார். அதே நேரத்தில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட  சன் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலாநிதி மாறனின் தம்பி தயாநிதி மாறனும் விருப்ப மனு அளித்திருந்தார்

நிர்மலா சீட் கேட்டதை அறிந்த  கலாநிதி மாறன் அடுத்த நொடியே சன் தொலைக்காட்சியில் இருந்து நிர்மலா பெரியசாமியை தூக்கினார். அதன்பிறகு பலமுறை முயன்றும் திமுகவில் அவருக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் கலாநிதி மாறன் அடித்த சம்மட்டி அடியால் வணக்கம் என்ற குரல் இல்லாமலே முடங்கிப் போனது.

இதையடுத்து கல்வித் துறையில் உயர்நிலையில் இருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் இணைந்து  ஜவுளி வியாபாரம் பார்த்ததில் 44 லட்சம் கடன் ஏற்பட்டு நிர்மலா பெரியசாமி நொடித்துப் போனார்.

அந்த நேரத்தில் கருணாநிதியுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி அரசு ஒதுக்கீட்டில் வீடு ஒன்றைப் பெற்று  அதனை விற்று கடனை அடைத்தாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்கு கட்சியில்  இணைந்து நான்கைந்து ஆண்டுகள் காலத்தை ஓட்டினார். பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செர்லவதெல்லாம் உண்அ என்றநிகழ்ச்சியையும் நடத்தி வந்தார்.

இதையடுத்து ஜெயா டிவி செய்திவாசிப்பாளர் ஃபாத்திமா பாபுவின் கடும் எதிர்ப்பை சமாளித்து நிர்மலா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணமடையவே ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார்.

அவருடன் ஒட்டிக் கொண்டு  அதிமுகவின் செய்தித் தொடர்பாளரா இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.  இந்நிலையில்தான் நிர்மலா பெரியசாமிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட ஆசை எழுந்துள்ளது.

நிர்மலா பெரியசாமி சொந்த ஊர் கரூர் மாவட்டம் என்பதால் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அதிமுகவில் விருப்ப மனு கொடுத்த நிர்மலா பெரியசாமி, நேற்று நேர்காணலிலும் பங்கு பெற்றார்.

இதையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் நிர்மலா பெரியசாமிக்கு சீட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் நிர்மலாவுக்கு சீட் கிடைத்தால் அவரது தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், செந்தில் பாலாஜியின் வெற்றி நிச்சயம் என்றும்  அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அதிமுக சார்பில் நிர்மலா பெரியசாமிக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மொட்டை அடிக்காத குறையாக கடவுளிடம் வேண்டி வருகின்றனர். 

click me!