
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிமி அமைச்சர் சிதம்பரம் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம், தங்க வைர நகைளை கொள்ளையடித்துச் சென்றனர்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். அக்கட்சியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக கருதப்படும் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எஸ் மீடியா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
இவரது வீடு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்கு சென்றுள்ளளனர். இந்நிலையில் அவரின் வீட்டில் இருந்து ரூ.1.10 லட்சம் பணம், தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.