விபச்சாரத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும்….. ஓய்வு பெற்ற நீதிபதி விருப்பம் !!

First Published Jul 8, 2018, 9:08 AM IST
Highlights
Prostitution must be legalized told retired judge santhosh hegde


சூதாட்டத்தைப் போல விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந் தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார். அப்போதுதான் விபச்சாரம் கட்டுக்குள் வரும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சட்ட ஆணையம்  கடந்த வியாழக்கிழமையன்று மத்திய அரசுக்குஅளித்த பரிந்துரையில், ‘இந்தியாவில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்றும் அவ்வாறு சட்டப்பூர்வமாக்கும் பட்சத்தில் அந்நிய முதலீடுகள் பெருகிநாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்’ என்று தெரிவித்திருந்தது. இது நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இப்பிரச்சனை பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ள நிலையில்  ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘சூதாட்டம் மட்டுமல்ல, விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாக்க வேண்டும்’ என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.‘

சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கும்போது, சட்டவிரோத சூதாட்டங்கள் நின்றுவிடும்; சட்ட விரோத செயல்களும் நின்றுவிடும்; சூதாட்டத்தை போன்று விபச்சாரத்தையும் சட்டப்பூர்வம் ஆக்கலாமா? என்று கேட்டால் நான் ‘ஆம்’ என்று தான் செல்வேன் என தெரிவித்தார்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் அத்தொழிலில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வருவாய் முறைப்படுத்தப்படும்; விபச்சார தொழிலும் கட்டுப்பாட்டுக்குள் வரும்’ என்று சந்தோஷ் ஹெக்டே  கூறினார்.

இதனிடையே, ஊடகம் ஒன்றுக்குபேட்டியளித்துள்ள சட்ட ஆணையத் தின் தலைவர் பி.எஸ். சவுகான், தங்களின் அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், ‘தற்போதைய இந்திய சூழலில் பெட்டிங், சூதாட்டம் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக்கும் செயல் விரும்பத்தக்கது அல்ல; எனவே, இவற்றை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்’ என்றே அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தங்களின் பரிந்துரையை மீறி மத்திய - மாநில அரசுகள் பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க விரும்பினால், குறிப்பான சில விதிமுறைகளையாவது பின்பற்ற வேண்டும் என்று மட்டுமே அரசுக்கு ஆலோசனை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

click me!