
நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்றபட்டது. குப்பைக்கு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு நாமக்கல் போன்ற மாவட்டங்களில் குப்பைக்கு தனியாக வரி வசூல் செய்வதாகவும் அதனால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இதுகுறித்து கடந்த மாதம் ஈரோட்டில் போராட்டமும் நடைபெற்றது. அப்போது அவர்கள் அளித்த மனுவில் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருபவரிடம் குப்பை வரி என ஒரு தொகையை சேர்த்து கட்டாய வசூல் செய்வதாகவும் குப்பை மூலம் வருவாய் ஈட்டக்கூடிய பல வழிகள் இருந்தும் குப்பைக்கு பொருத்தமற்ற முறையில் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவ்வாறு பொறுத்தமற்ற முறையில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரியை கைவிடவேண்டும் எனவும் இதனால் ஜவுளி மற்றும் தோல் தொழில்கள் ஸ்தம்பித்த நிலையில், ஜி.எஸ்.டி. காரணமாக மேலும் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்றபட்டது. குப்பைக்கு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டனர்.