ஒட்டு மொத்தமாய் அடியோடு உருமாறப்போகும் எடப்பாடி... ’திமுக.. ரா..ரா... சரசக்கு ரா ரா..’!

By Thiraviaraj RMFirst Published Aug 1, 2019, 5:57 PM IST
Highlights

தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியை நடத்தி வரும் அதிமுக 2021 தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று இப்போதே வியூகங்களை வகுத்து வருகிறது. 
 

அதிர்ஷ்டத்தில் கிடைத்த முதல்வர் நாற்காலியை உடும்புபிடியாய் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என தவியாய் தவித்து வந்த எடப்பாடி ஐபேக் நிறுவனரும் பிரச்சார வியூக தேர்தல் மன்னன் பிரசாந்த் கிஷோர் மூலம் தேர்தலுக்காக தடியை எடுக்க முன் வந்து விட்டார்.  

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல் ஹாசன் ஆகியோர் பி.கேவை நாடியுள்ளனர். வரும் தேர்தலில் இவர்களுக்கு பல்வேறு வகைகளில் பி.கே உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு டெல்லி சென்றிருந்தபோது, பிரசாந்த் கிஷோரை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசி டீலை முடித்து விட்டார்.

 

ரூ.150 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு 1,200 ஐடி ஊழியர்கள் ஆடி 18 க்கு பிறகு களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் அதிமுகவை வலுப்பெறச் செய்ய பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுக்க தொடங்கியுள்ளார். இதனால் அதிமுகவின் ஐடி விங்கில் மாற்றம்,  எடப்பாடி பழனிசாமி தோற்றம், கட்சியின் செயல்பாடுகளில் முன்னேற்றம், ஒற்றை தலைமையில் ஏற்றம் உள்ளிட்டவற்றில் படிப்படியாக மொத்தமாக மாற்றங்களை காண இருக்கிறது. 

இதையும் படிங்க:-   பாகிஸ்தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்த இந்தியாவின் இந்துப்பெண்... நியூயார்க்கில் அதிர வைத்த இளம்பெண்கள்..!

அதாவது மு.க.ஸ்டாலினை ஓ.என்.ஜி நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்து செய்லபடுத்துவதை போல நூறுமடங்கு ஐபேக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல உள்ளார் எடப்பாடி. அவர்கள் எடப்பாடியின் தோற்றம், பேச்சு, நடவடிக்கைகளை மொத்தமாக மாற்ற இருக்கின்றனர். அதேசமயம் வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பி.கேவின் திட்டங்கள், எடப்பாடியை உயர்த்துமா? என்பது கேள்விக் குறியே... 

இவற்றையெல்லாம் ஸ்மல் செய்து  விட்ட திமுக, என்ன செய்வது என்று கலக்கத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர். அதேவேளை 1200 ஐடி ஊழியர்களை களத்தில் இறக்கினாலும் மக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். இந்த 1200 பேர் ஒட்டு மொத்த தமிழர்களையும் வளைத்து விடுவார்களா? அத்தோடு எங்களது ஓ.என்.ஜி ஐடி விங்கும் சாதாரணமானதல்ல என கூறும் திமுக அடுத்து தனது பங்கிற்கு ஐடிவிங்கை மேலும் பலப்படுத்த தயாராகி விட்டது.  

இதையும் படிங்க:- உங்களுக்கு போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட் இருக்கா..? மத்திய அரசு தரும் ரூ.15 லட்சம்..? அலைமோதும் மக்கள் கூட்டம்..!

click me!