
டிடிவி ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து இன்று மாலைக்கு அரசிதழில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை செயலாளர் க.பூபதி, இன்று வெளியிட்டுள்ள ஒரே அறிவிப்பின் மூலம், தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அதிக வாக்கைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள், முதலமைச்சரின் மீது புகார் அளித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் நேற்றே ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது அடிப்படையில், எடப்பாடி முந்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆளுநரிடம், முதலமைச்சர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளனர்.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி காலி என அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
மேலும், இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.