TN Local Body Elections 2022: தேர்தல் அமைதியா நடக்கிறது .. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் .

By Ezhilarasan Babu  |  First Published Feb 19, 2022, 11:08 AM IST

பொதுமக்கள் வாக்களிக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  5794 வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு தொங்கியுள்ளது என்றும் சென்னையில் வாக்கு பதிவு நிலவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.


சென்னையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன் தீப் பேடி தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 இடங்களில் பொருத்தும் பணி தாமதமானது, அதனை சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி,, பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சி களுக்கும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 

Latest Videos

இந்நிலையில சென்னை விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா பள்ளியில் சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி குடும்பத்தினருடன் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஜனநாயக கடமையாற்ற மக்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும், வாக்களிக்காமல் வீட்டில் மக்கள் இருக்க கூடாது. பொதுமக்கள் வாக்களிக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  5794 வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு தொங்கியுள்ளது என்றும் சென்னையில் வாக்கு பதிவு நிலவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.

தங்களது வேட்பாளர்களை பொதுமக்கள் தேர்ந்துதெடுப்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்றும், கொரோனா சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 இடங்களில் பொருத்தும் பணி தாமதமானது, அதனை சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது என்றும் தெரிவித்தார்.
 

click me!