TN Local Body Elections : பாஜகவை NOTAவுடன் ஒப்பிட்டு கிண்டல் பண்ணீங்க. இப்போ 4 எம்எல்ஏ.. கொத்து காட்டிய குஷ்பு

Published : Feb 19, 2022, 10:37 AM ISTUpdated : Feb 19, 2022, 10:41 AM IST
TN Local Body Elections : பாஜகவை NOTAவுடன் ஒப்பிட்டு கிண்டல் பண்ணீங்க. இப்போ 4 எம்எல்ஏ.. கொத்து காட்டிய குஷ்பு

சுருக்கம்

நோட்டா வோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்கும் வேலையில் 4 பேர் சட்டசபைக்கு சென்று வீட்டார்கள். காலம் மாறி வருகிறது

பாஜக தனித்து போட்டியிட்டதில் தப்பில்லை, எங்களுக்கு தைரியம் இருந்ததால் தேர்தலில் தனித்து போட்டியிட்டோம் என்றும், மக்களிடம் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூர் தொகுதி 126 ஆவது வார்டு மந்தைவெளி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில்,பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அமைப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சுந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார்.அதனையடுத்து, பொதுமக்கள் குஷ்பு உடன், புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு கூறியதாவது :-

வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை. வாக்களிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு இருந்து குறை சொல்லக்கூடாது. மக்கள் வெளியே வந்து, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் என எதையும் பாராமல் மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஜனநாயக ரீதியாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நான் எனது ஓட்டினை செலுத்தி விட்டேன்.எனவே மக்கள் வீட்டுக்குள்ளே இல்லாமல் கண்டிப்பாக வெளியே வந்து மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை அவர்கள் சிந்தித்து அவர்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும் என்று கூறினார்.

பாஜக தனித்து போட்டியிடுவதில் தப்பில்லை எங்களுக்கு தைரியம் இருந்ததால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் வெற்றி வாய்ப்பை பற்றி தற்பொழுது பேச முடியாது என்றும் கூறினார்.தமிழகத்தில் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நோட்டா வோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்கும் வேலையில் 4 பேர் சட்டசபைக்கு சென்று வீட்டார்கள்.காலம் மாறி வருகிறது. மக்களை சோம்பேறி ஆக்குவதற்கு பணம், டிவி, மின்விசிறி, கொலுசு கொடுக்கிறார்கள். மக்களுக்கு கல்வி, தண்ணீர், வீடு, பெண்களுக்கு பாதுகாப்பு, அனைவருக்கும் தொழில் இதுதான் வேண்டும் என்றார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!