சிரித்துக் கொண்டே இந்தியாவை முதுகில் குத்தும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்போம் என எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jan 16, 2021, 4:11 PM IST
Highlights

இந்நிலையில் ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை கொள்முதல் செய்வதில் இந்தியா தீவிரம் காட்டி வருவதால், ஒருவேளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினாள் இந்தியா மீது பாரபட்சமின்றி, பொருளாதார தடை விதிக்க நேரிடும் என அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்தியா ரஷ்யாவிடமிருந்து  எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினாள் இந்தியா பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் கொள்முதல் செய்த துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில்,  தற்போது இந்தியாவுக்கும் அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருபுறம் சீனாவும் மறுபுறம் பாகிஸ்தானும் தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியா தனது ராணுவ பலத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  அந்த வகையில் தரையிலிருந்து வானில் 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை கொள்முதல் செய்ய ரஷ்யாவிடம் இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 

 

சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பணத்தை இந்தியா செலுத்தியுள்ள நிலையில், மீத தொகையை செலுத்துவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏவுகணை தடுப்பு ஆயுதத்தின் முதல் தொகுப்பு இந்த ஆண்டு இறுதியில் ஒப்படைக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் ஆரம்பம் முதல் இருந்தே ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்குவதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுத ஏவுகணை தடுப்பை வாங்கும் திட்டத்தை உடனே இந்தியா கைவிட வேண்டும் எனவும், இல்லையெனில் பிரச்சினையை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்கா இந்தியாவை மிரட்டி வருகிறது. ஆனால் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாத இந்தியா, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எஸ்-400 ஆயுதத்தை வாங்கியே தீருவோம் என்பதில் உறுதியாக உள்ளது. 

இந்நிலையில் ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை கொள்முதல் செய்வதில் இந்தியா தீவிரம் காட்டி வருவதால், ஒருவேளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினாள் இந்தியா மீது பாரபட்சமின்றி, பொருளாதார தடை விதிக்க நேரிடும் என அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில தினங்களில்  ட்ரம்ப் ஆட்சி முடிவடைவடைந்து ஜோபிடன் பொறுப்பை ஏற்க உள்ளார். பிடன் ஆட்சிக்கு வந்த பின்னரும் இதே நிலையே தொடரும் என கூறப்படுகிறது. இந்தியா அமெரிக்காவுடன் நட்புறவில் இருந்தாலும், எஸ்-400 ரக விவகாரத்தில் இந்தியாவுடன் எந்த சமரசமும், சலுகையும் செய்து கொள்ளப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புக்கான 5.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்து  இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடியை தவிர்க்குமாறு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஸ்ரீவாஸ்தவா, இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய பங்காளிகளாக இருந்து வருகின்றன. அதேபோல் ரஷ்யாவுடனும் இந்தியா அதே நட்புடன் இருந்து வருகிறது. இந்தியா எப்போதும் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவு நம் தேசிய பாதுகாப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டது என கூறியுள்ளார். 

 

click me!