சர்ச்சையில் சிக்கிய விஜயேந்திரருடன் மத்திய இணை அமைச்சர் திடீர் சந்திப்பு!

 
Published : Jan 28, 2018, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
சர்ச்சையில் சிக்கிய விஜயேந்திரருடன் மத்திய இணை அமைச்சர் திடீர் சந்திப்பு!

சுருக்கம்

The Union Minister of State met with Vijayendrar

தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது நாற்காலியில் அமர்ந்திருந்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரரை, மத்திய உள்துறை இணை அமைச்சர் ரிஜுஜூ திடீரென சந்தித்து பேசியிருப்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை அரிகரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன்பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். இதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவரின் இந்த செயல் பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகி இருக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர், தியானத்தில் இருந்தார் என்று காஞ்சி சங்கர மடம் விளக்கமளித்தது. விஜயேந்திரரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் உள்ள காஞ்சி சங்கர மடங்கள் நாள்தோறும் முற்றுகையிடப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து, காஞ்சியில் உள்ள சங்கரமடத்துக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. விஜயேந்திரரை கைது செய்யக்கோரி பல்வேறு புகார்கள் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நேற்று காஞ்சி சங்கர மடத்துக்கு வருகை தந்தார். முதலில் சர்ச்சைக்குரிய விஜயேந்திரரை சந்தித்தார் ரிஜுஜூ. இதன் பின்னர், ரிஜுஜூ, ஜெயேந்திரரையும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. 

தங்களுக்கு எதிராக சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில் மத்திய அரசு, தங்கள் பக்கம்தான் என்பதைக் காட்ட காஞ்சி சங்கராச்சாரியார்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனே கிரண் ரிஜுஜூவின் வருகை என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய இணை அமைச்சர் ஒருவர் சந்தித்துள்ளது மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ், சீமான் போன்று விவசாயத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்..! நல்ல விஷயம் என மகிழும் கொங்கு மக்கள்
செங்கோட்டையன் நமது பலம்..! தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டாடிய விஜய்