JUDGE எதிரில் பெண்ணுடன் வழக்கறிஞர் செய்த அசிங்கம்.. பதவியே வேண்டாம் என வெறுத்ததாக நீதிபதி வேதனை..

By Ezhilarasan BabuFirst Published Dec 23, 2021, 2:12 PM IST
Highlights

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தார். 

காணொளி காட்சி விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அசிங்கமான செயலால் தனது பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என தான் நினைத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில். நீதிமன்ற வழக்கு விசாரணை பெருமளவில் ஆன்லைனில் வாயிலாக நடந்து வருகிறது. தொட்டி ஓரளவுக்கு குறைந்துள்ளதால்  50 சதவீதம் வழக்கறிஞர்களுடன் நீதிமன்றங்கள் இயங்கினாலும் 50 சதவீத வழக்குகள் காணொளி காட்சி மூலமாகவே விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  வழக்கு ஒன்றில் நீதிபதி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தபோது காணொளிக்காட்சி கேமரா ஆனில் இருப்பதுகூட தெரியாமல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண் ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அதற்கான வீடியோ காட்சியை சமூகவலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோ காட்சிகள் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன். அந்த குறிப்பிட்ட வழக்கறிஞர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டதுடன், அந்த நபருக்கு ஆயுள் கால தடை விதிக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அந்த செயலில் ஈடுபட்ட வழக்கறிஞர் பெயர் சந்தானகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. அந்த ஒழுங்கினமான சம்பவம் நீதிபதி ஜி.கே இளந்திரையன் பெஞ்ச் முன் நடந்தது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.என் பிரகாஷ் மற்றும் ஆர்.ஹேமாலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது, ஒரு நீதிபதி உத்தரவு வழங்கிக் கொண்டிருக்கும்போது அவர் முன் ஒரு வழக்கறிஞர் இது போல ஒழுக்க கேடாக நடந்து கொண்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் இதுபோன்ற செயல் வெட்கக்கேடானது, அநாகரிகமானது, இப்படிப்பட்ட அநாகரீகம் வெட்கக்கேடு பகிரங்கமாக நிகழும்போது இந்த நீதிமன்றம் வெறும் ஊமை பார்வையாளராக இருக்க முடியாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் அவமதிப்பு வழக்குகளை தொடங்கியது மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பிற தண்டனைச் சட்டங்களின் கீழ் அறியக்கூடிய குற்றங்களை வீடியோ முதன்மையாக வெளிப்படுத்தியதால், சம்பவம் குறித்து CB-CID விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பான முதற்கட்ட அறிக்கையை டிசம்பர் 23-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பரவும் இந்த சம்பவத்தின் வீடியோவை உடனே நீக்குவதற்கான வழிவகை ஆராயுமாறு சென்னை பெருநகர காவல்துறை ஆணையருக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வருவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது, எனவே இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதியின் பரிசிலணைக்கு முன் வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி,சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அடையாளம் காணப்பட்டு,வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராக  உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ் இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம் என்றும் பதவியை ராஜினாமா செய்து விடலாமா என யோசித்ததாக வேதனை தெரிவித்தார்.
 

click me!