Omicron: அடி தூள்.. ஒமைக்ரான் குறித்து வெளியானது குட் நியூஸ்.. வயிற்றில் பால் வார்த்த ஆய்வு முடிவுகள்.

By Ezhilarasan BabuFirst Published Dec 23, 2021, 1:35 PM IST
Highlights

இந்நிலையில்தான், பிரிட்டனில் இருந்து வரும் இரண்டு பத்திரிகைகளில் ஆய்வு கட்டுரைகள் வெளியாக உள்ளது. அதில் டெல்டா வைரஸ் போன்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து என்பது குறைவு என கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆபத்து குறைவு என்று ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. இந்த வகை வைரஸ் டெல்டாவை காட்டிலும் பன் மடங்கு வேகமாக பரவக்கூடியது என்றும், இது அதிகமாக பரவும் பட்சத்தில் மனிதச் சமூகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்றும் உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில், இவ்வாறு முடிவு வெளியாகியிருப்பது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை தடுக்க முடியும் என அறிவித்த விஞ்ஞானிகள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வைரஸ் அடிக்கடி உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அதிக பிறழ்வுகளுடன் ஓமைக்ரான் வைரசாக  உருவெடுத்துள்ளது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் இந்த புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என உலக நாடுகள் அஞ்சிவருகின்றன. ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய வைரஸ் என பட்டியலிட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளன. அந்நாட்டிற்கு விமானப் போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சௌமியா சாமிநாதன் ஒமைக்ரேன் என்ற உருமாறிய கொரோனா உலகநாடுகளுக்கு மிகப்பெரும் சவாலான ஒன்றாக இருக்கலாம், மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளை நாம் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை தான் இந்த வைரஸ், இது மிக வேகமாக பரவக்கூடியது, வேகமாக பரவும் பட்சத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும்,

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த ஓமைக்ரான் டெல்டா வகையை காட்டிலும் 3 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம். இதுகுறித்து வரும் காலங்கள் நமக்கு தெளிவாக தெரியவரும். அதற்கான சோதனைகள் வேகமாக நடந்து வருகிறது என அவர் எச்சரித்திருந்தார். இந்நிலையில் இந்த வகை வைரஸ் தீவிர தன்மை கொண்டது என்பதற்கான எந்த சான்றுகளும் கண்டறியப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளனர். இது சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இதை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய வகை வைரஸ் என்ற பட்டியலில் சேர்த்திருப்பதும், இது தனது புரத ஸ்பைக்குகளில் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளை கொண்டிருப்பதால் இது அதிக ஆபத்தாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்தான், பிரிட்டனில் இருந்து வரும் இரண்டு பத்திரிகைகளில் ஆய்வு கட்டுரைகள் வெளியாக உள்ளது. அதில் டெல்டா வைரஸ் போன்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து என்பது குறைவு என கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் 29 முதல் டிசம்பர் 11 வரை இங்கிலாந்தில் உள்ள அனைத்து PCR-உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் பாதிப்புகளையும் UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் UK ஹெல்த் சர்வீஸின் தரவை இந்த ஆய்வு பயன்படுத்தியது. அதில் டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 5.4 மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில், இறப்பு எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது மற்றும் ஆரம்ப அறிக்கைகள் மற்ற கோவிட் விகாரங்களை விட ஓமிக்ரான் மாறுபாடு மிகவும் கடுமையானதாக இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், அதில் லேசான விளைவுகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொண்டதாகவும் ஒருவேளை பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த முடிவு மாறக்கூடும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்ட ஆய்வு என்றும் புள்ளிவிபர ரீதியாக அது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆபத்து குறைவு என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதேபோல் ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆராய்ச்சியாளர்களால் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் , ஓமிக்ரான் மாறுபாடு டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக மனித சுவாசப்பாதையில் பிரதிபலிக்கிறது, ஆனால் அசல் வைரஸ்வுடன் ஒப்பிடும்போது நுரையீரலில் தொற்று குறைவாக இருப்பதாகத் அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!