கருணாநிதி சமாதியில் நட்டநடுச் சாமத்தில் கேட்கும் அழுகுரல்... நிழலுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

Published : Oct 29, 2020, 06:50 PM ISTUpdated : Nov 27, 2020, 09:44 AM IST
கருணாநிதி சமாதியில் நட்டநடுச் சாமத்தில் கேட்கும் அழுகுரல்... நிழலுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

சுருக்கம்

 கருணாநிதியை வீட்டில் இருந்து வீல் சேரில் ஏற்றி விழா நடக்கும் இடத்தில் அமர வைப்பது முதல், பர்சனல் உதவிகள் செய்வது வரை எல்லாமே நித்யா தான். 

கருணாநிதிக்கு எப்போதும் கூடவே இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் அவரது செயலாளர் சண்முகநாதன், பல ஆண்டுகளாக அவருடைய செயல்திட்டங்களுக்கு எல்லாம் செயல்வடிவம் கொடுத்தவர். இன்னொருவர் நித்யா. எல்லாம் உறுப்பினர்கள், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட இவர்கள் இருவரும் தான் கருணாநிதியின் நிழலாக இருந்தவர்கள்.

 கருணாநிதியை வீட்டில் இருந்து வீல் சேரில் ஏற்றி விழா நடக்கும் இடத்தில் அமர வைப்பது முதல், பர்சனல் உதவிகள் செய்வது வரை எல்லாமே நித்யா தான். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், கட்சிப் பதவிகள் தொடங்கி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பதவிகள் வரை நித்யாவுக்கு வேண்டப்பட்டவருக்கு கிடைத்திருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். ’தலைவர் என்ன மூடில் இருக்கிறார்?’என்று இவரிடம் கேட்டுக்கொண்டுதான் கட்சியின் சீனியர்களே கருணாநிதியை வந்து சந்திப்பார்களாம். 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பல்லாவரம் பகுதியில் கருணாநிதி என்கிற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருந்தார். அந்தப் பெயரை பரிந்துரைத்தது நித்யா. அவரை மாற்றக்கோரி ஸ்டாலினும், தா.மோ.அன்பரசனும் சென்று கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். அப்போது டென்ஷனான கருணாநிதி, ‘என் கூடவே இருந்து என்னைக் கவனித்துக் கொள்வது நித்யா தான். அவன் சொன்ன ஆள் தான் அங்கு வேட்பாளர். வேறு எங்கு வேணாலும், யாரை வேணாலும் மாற்றிக்கொள்ளுங்கள். பல்லாவரம் வேட்பாளரை மட்டும் மாற்றக்கூடாது’என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதியின் மனதில் நித்யாவுக்கு இடம் உண்டு.

 கருணாநிதி இருக்குற வரைக்கும், கட்சியில் அவருக்கு செல்வாக்கு இருந்தது. கருணாநிதி மறைவுக்கு பிறகு இவரை யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் இரவு நேரம், கருணாநிதி நினைவிடத்துக்கு போய், புலம்பி அழுது, ஆறுதல் அடைந்து வருகிறார். இனிமேல், கட்சியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!