சசிகலா குறித்து அதிமுகவில் விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் காலி... அடித்து கூறும் திவாகரன்..!

Published : Oct 29, 2020, 04:29 PM ISTUpdated : Oct 29, 2020, 04:32 PM IST
சசிகலா குறித்து அதிமுகவில் விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் காலி... அடித்து கூறும் திவாகரன்..!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார் என சசிகலா சகோதரர் திவாகரன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார் என சசிகலா சகோதரர் திவாகரன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச் செயலாளருமான திவாகரன்;- கல்வித்துறையில் உரிய நடைமுறையை தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. ஏசி அறையில் அமர்ந்துகொண்டு பள்ளி திறப்புகள் குறித்து பேசுவது சரியல்ல. அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல. ஸ்டாலினை பாராட்டியபோது திமுகவில் இணையப்போவதாக கூறினர். யார் நல்லது செய்தாலும் புகழ்ந்துதான் பேசிவேன். செத்தாலும் சாவேனே தவிர நான் எப்போதும் மூன்று கரை வேட்டியை மாற்ற மாட்டேன். 

சசிகலா தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளிவருவார். சசிகலா வெளியே வந்த பின்னர்தான் அரசியல் மாற்றம் குறித்து தெரியவரும்.  சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டாம் என வலியுறுத்தினேன். சசிகலாவைச் சுற்றி நிறைய சதிகள் நடைபெற்றது.

மேலும், ஜெயலலிதா இறந்தவுடன் மூன்று பேர் முதல்வராக வேண்டும் என முயன்றார்கள். சசிகலா ஒப்படைத்த வேலையை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாகக் கையாண்டார். சசிகலா குறித்து முதல்வரும், துணை முதல்வரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சசிகலா குறித்து விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்