இரு பெண்கள், நட்புடன் பழகி பின்னர் அது காதலாக மாறிய விவகாரம்.. நீதி மன்றம் போட்ட செம்ம உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Dec 7, 2021, 6:24 PM IST
Highlights

மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பால் ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை உருவாக்கும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பால் ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை உருவாக்கும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். 

இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன்பால் ஈர்ப்பாளருக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். 

இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி உரிய விதிகளை கொண்டுவர டிஜிபி, அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறினர். இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

click me!