டெல்லி விவிஐபிக்களை போட்டுத் தள்ள வந்த பயங்கரவாதிகள்... பொறிவைத்து பிடித்த டெல்லி சிறப்பு படை..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2020, 4:55 PM IST
Highlights

தலைநகர் டெல்லியில் முக்கிய விஐபிக்கள் மற்றும்  விவிஐபிக்களை குறிவைத்து  தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள 2 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும், அவர்கள் இந்தியாவில் பல விஜபிக்களை குறிவைத்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளில்  பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றனர், உளவுத்துறையின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்தும் வருகின்றனர். இதனால் நாட்டில் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு திங்கட்கிழமை இரவு இரண்டு பயங்கரவாதிகளைஅதிரடியாக கைது செய்தது. 

அவர்களிடம் சில முக்கியமான ஆவணங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள். அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மற்றும் குப்வாராவை சேர்ந்தவர்களாவர் ஆவர். வாட்ஸ்அப் குழுவில் பாகிஸ்தானியர்களுடன் அவர்கள் அடிக்கடி உரையாடியது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் 10 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதாவது டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு சாராய் காலேகானில் சில சந்தேகப்படும் நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மீண்டும் அவர்களுக்கு கிடைத்த ஆதாரப்பூர்வமான தகவல்களின்படி சிறப்பு படை அவர்கள் இருவரையும் கைது செய்தது. அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டன. இரு பயங்கரவாதிகளிடமிருந்து 2 தானியங்கி கைத்துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் பெயர்கள் அப்துல் லத்தீப் மிர் மற்றும் அஷ்ரப் கட்டானா  என்பதும் தெரிய வந்துள்ளது. ஒரு பயங்கரவாதி பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் குப்வாராவில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. தலைநகர் டெல்லியில் முக்கிய விஐபிக்கள் மற்றும்  விவிஐபிக்களை குறிவைத்து  தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர்களின் தாக்குதல் பட்டியலில் யார் யார் இடம் பெற்றிருந்தனர் என்பது குறித்தும் அவர்கள் இருவரிடமும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் பாகிஸ்தானிலுள்ள பலருடன் வாட்ஸாப்பில் உரையாடியது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களது தொலைபேசியை ஆராய்ந்ததில் அவர்களது வாட்ஸப் குழுவில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் இருப்பதும் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பாகிஸ்தானில் பயிற்சிக்காக செல்ல விரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாத்தின் வீடியோ கிளிப் இவர்களது செல்போனில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பயங்கரவாதிகளும் சஹாரன்பூரில் உள்ள தியோபந்தையும்  நோட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடதக்கது. 

 

click me!