ஆமா... உங்க கட்சியில இருக்கிறவங்க எல்லாம் புத்தர், காந்தி... ஸ்டாலினை எகிறியடித்த சி.வி.சண்முகம்..!

By vinoth kumarFirst Published Nov 17, 2020, 4:15 PM IST
Highlights

பொது ஊழியர்களின் உறவினர்கள் அரசு ஏலத்தில் கலந்துகொள்ள கூடாது என எந்த விதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

பொது ஊழியர்களின் உறவினர்கள் அரசு ஏலத்தில் கலந்துகொள்ள கூடாது என எந்த விதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், வானுர் வட்டம், திருவக்கரையில் உள்ள கல்குவாரி உரிமத்தை, அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி மகனுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பொது ஊழியர்கள், தங்களுக்கோ, உறவினர்களுக்கோ, அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக் கூடாது. அரசின் குத்தகைகளைப் பெறக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- பொது ஊழியர்களின் உறவினர்கள் சட்டபூர்வமாக விடப்படும் ஏலத்தில் கலந்துகொள்ளக்கூடாது என எந்தச் சட்டத்திலும், எந்த இடத்திலும் சொல்லவில்லை. திமுகவில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா? அவர்கள் யாரும் தொழில் செய்யவில்லையா? குற்றச்சாட்டைச் சொல்வதற்கு முன்பு தன் தவறுகளைப் பார்க்க வேண்டும்.

குறிப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மகன், முறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சட்டபூர்வமான பொது ஏலத்தில் கலந்துகொண்டு ரூ.28 லட்சத்தில் எடுக்கப்பட்ட குவாரியை இரண்டாண்டு காலமாக நடத்தி வருகிறார். இதில், எந்த வீதிமீறலும் இல்லை. அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் காமெடி செய்ய வேண்டாம். தவறு செய்திருந்தால் நான் அமைச்சர் பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

click me!