எவ்வளவு போராடியும் கட்டுப்படாத கொரோனா... ஊரடங்குக்கு அனுமதி கேட்டு முதலமைச்சர் கடிதம்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2020, 4:34 PM IST
Highlights

இந்நிலையில் டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மட்டும் சில நாட்களுக்கு ஊரடங்கு கொண்டுவர மத்திய அரசிடம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி கோரியுள்ளார். 

டெல்லியில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும்  ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசாங்கம்  ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறிய அளவிலான ஊரடங்கு விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் தற்போது  200 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள திருமணங்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி அரசு மத்திய அரசுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் கொரோனா நிலைமையை ஆய்வு செய்தார். 

அதாவது டெல்லியில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை  வீசி வருவதாகவும், அங்கு தற்போது இந்த நோய் தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து வருவதாகவும், இதுவரை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 104 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் திங்கட்கிழமை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய  சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தற்போதுள்ள நிலையில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என நாங்கள் கருதவில்லை. முடிந்தவரை முகக்கவசம் அணிவதன் மூலமே அதை தடுக்க முடியும். அதே நேரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை உச்சத்தை கடந்துவிட்டது, கடந்த அக்டோபர் 26-ம் தேதிக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் புதிதாக 1115 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை  85 லட்சத்தை கடந்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மட்டும் சில நாட்களுக்கு ஊரடங்கு கொண்டுவர மத்திய அரசிடம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி கோரியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அறிந்த உடனடியாக 750க்கும் மேற்பட்ட ஐசியு படுக்கைகளை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நான் மக்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், தயவு செய்து கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என்பதுதான். நாளுக்கு நாள் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  கொரோனா ஹாட் ஸ்பார்ட் பகுதிகள், சந்தை பகுதிகளில் மட்டும் தேவைப்பட்டால்  சிறிய அளவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்றார். 

அதாவது 200க்கு அதிகமானோர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என அனுமதி அளித்திருந்த நிலையில், இப்போது மிண்டும் அந்த அனுமதி திரும்பப் பெறப்படுகிறது. இனி 50 பேர் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளில், விசேஷங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முடிவு தற்போது துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். 

 

click me!